புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் நியமனம்

தொடர்ந்து 3-வது முறையாக சாகர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் நியமனம்
Published on

சென்னை:

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதீ செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து 3-வது முறையாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கடந்த முறை 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சாகர் ரதீ கூறுகையில், 'தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த நிலையை எட்டுவதே எங்களது இலக்கு. ஒவ்வொரு புள்ளி மற்றும் தடுப்பாட்டத்துக்காக நாங்கள் கடினமாக உழைப்போம்' என்றார்.

அணியின் தலைமை பயிற்சியாளராக உதயகுமாரும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனும் செயல்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com