வெண்கலம் வென்ற மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.
Manu Bhaker, Sarabjot Singh
Published on

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com