உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

கோபன்ஹேகன்:

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் வீரர் கென் லோ யூவுடன் மோதினார்.

இதில் பிரனாய் 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com