நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா

நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்தது.
praggnanandhaa
Published on

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்தது. இதில் பங்கேற்றுள்ள 6 வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

9-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 15½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளியுடன் 2-வது இடத்திலும், அலிரெஜா 14½ புள்ளி களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த 10வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்தார்.

இதன்மூலம் நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

ஏற்கனவே, ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய ஆனந்தின் 19 ஆண்டுகால சாதனையையும் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com