அம்மாவின் வார்த்தைகள் ஊக்கம் அளித்தது: பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
praggnanandhaa
Published on

நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஆர்.பிரக்ஞானந்தா புதிய வரலாறு படைத்தார். முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

பிரக்ஞானந்தா இந்தப் போட்டி தொடரில் தொடக்கத்தில் பின்தங்கி காணப்பட்டார். கடைசி 4 சுற்றிலும் அவர் பெற்ற வெற்றி சாம்பியன் பட்டம் பெற காரணமாக இருந்தது.

7-வது சுற்றில் அலிரேசாவையும், 8-வது சுற்றில் கார்ல்சனையும், 9-வது சுற்றில் குகேசையும், கடைசி சுற்றில் வின்சென்ட் கெய்மரையும் தோற்கடித்தார். தொடர்ச்சியாக பெற்ற இந்த 4 வெற்றியால் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தத் தொடரில் அவர் கார்ல்சனை 2 முறை வீழ்த்தினார். குகேஷ், அலிரேசா, கெய்மர் ஆகியோரை ஒருமுறை தோற்கடித்தார். அவர் மொத்தம் 5 வெற்றிகளை பெற்றார். 3 ஆட்டத்தில் தோற்றார். 2 போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கூறியதாவது:

ஈரான் வீரர் அலிரேசா உடனான ஆட்டத்திற்கு முன் கடந்த 1-ம் தேதி எனது அம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.

அப்போது அவர் இது ஒரு புதிய மாதம். நீ நன்றாக விளையாடுவாய் என்று கூறினார்.

அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதன்பிறகு 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்து இருக்கிறது. அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கம் அளித்தது என தெரிவித்தார்.

ஏற்கனவே, ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய ஆனந்தின் 19 ஆண்டுகால சாதனையையும் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com