புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ்

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ்
Published on

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.

இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 33-18 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 18 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் நுழைந்தது.

மற்ற போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் குஜராத் அணியையும், யுபி யோதாஸ் யு மும்பா அணியையும் வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com