மாரத்தான் நடை பந்தயம் கலப்பு அணிகள் பிரிவு: இந்தியாவின் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஏமாற்றம்

ஸ்பெயின் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.ஈகுவடார் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.
சுரஜ் பன்வார்- பிரியங்கா
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டது.

மொத்தம் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயின் ஜோடி அல்வாரோ மார்ட்டின்- மரியா பெரேஸ் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.

ஈகுவடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ- கிளென்டா மோர்ஜோன் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

ஆஸ்திரேலியாவின் ரிடியான் கவ்லே- ஜெமிமா மோன்டேஜ் ஜோடி 2 மணி நேரம் 51 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.

இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது. அதேபோல் செக்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com