அரியானா வீராங்கனை கிரண் பஹல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும்.
அரியானா வீராங்கனை கிரண் பஹல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Published on

பஞ்ச்குலா:

மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று தொடங்கியது.

இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும். இதை அடைந்த விட்ட கிரண் பஹல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்

'ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை எதுவும் கிடையாது' என்று 23 வயதான கிரண் பஹல் நெகிழ்ந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com