பாரா ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 25 ஆவது பதக்கம் - ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்

பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.
Kapil Parmar
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தற்போது ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.

ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com