வினேஷ் போகத் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது: நீரஜ் சோப்ரா

வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
vinesh phogat - neeraj chopra
Published on

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வினேஷ் போகத் குறித்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.

அதில், "வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள்.

பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com