

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ஆறாவது நாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டின் 7-வது நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 79.61 மீட்டர் தூரம் வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மேலும், இந்தியாவின் ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
நீரஜ் சோப்ரா 5வது இடமும், ரோகித் யாதவ் 9வது இடமும், யஷ்வீர் சிங் 10வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கான டாப் 12 பட்டியலில் இடம்பெற்றனர்.