

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை அணியின் பயண பெட்டிகளில் கிட்டத்தட்ட பாதி பெல்ஃபாஸ்டில் விடப்பட்டதால், அணிக்கு சிரமமான தொடக்கம் ஏற்பட்டது.
22 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி, பெல்ஃபாஸ்டில் நடந்த ஆயத்த பயிற்சி முகாமுக்கு பிறகு கிளாஸ்கோ வந்தடைந்தது.
பைகள் மாயம்:
ஆனால், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), கபில் பொக்காரியா (90 கிலோ) மற்றும் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சி. குட்டப்பா உள்ளிட்டோரின் பைகள் அவர்களுடன் வந்து சேரவில்லை.
குறுகிய பெல்ஃபாஸ்ட்-கிளாஸ்கோ வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானம் சிறியது என்று அணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன பயண பெட்டிகளில், பயிற்சி உபகரணங்களும், வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் குத்துச்சண்டை வீரர்கள் அணியவிருந்த உடைகளும் இருந்தன.
தொடர்கதை:
இந்த மாத தொடக்கத்தில், குத்துச்சண்டை வீரர்கள் தோஹாவில் இருந்து பெல்ஃபாஸ்டுக்கு விமானத்தில் சென்றபோதும் இதே போன்ற சம்பவங்கள் நடந்திருந்தன.
குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதால், இறுதி தயாரிப்புகள் வேகம் பிடிப்பதற்குள் பயண பெட்டிகள் கிளாஸ்கோவை சென்றடையும் என்று குழுவினர் நம்புகின்றனர்.
மேலும், மகளிர் பயிற்சியாளர் மந்தகானி சானுவுக்கு, குத்துச்சண்டை வீரர்கள் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படவில்லை. குத்துச்சண்டை நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.