உலக டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை- மணிகா பத்ரா சாதனை

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மணிகா பத்ரா - பெர்னாடெட் உடன் மோதினர்.இதில் மணிகா பத்ரா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
உலக டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை- மணிகா பத்ரா சாதனை
Published on

மான்ட்பெல்லிர்:

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டி பிரான்சில் உள்ள மான்ட்பெல்லிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-9, 6-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை (ருமேனியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் மணிகா பத்ரா, சீனாவின் கியான் தியானியை எதிர்கொள்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பத்ரா பெற்றார்.

முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-6, 7-11, 1-11, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான அட்ரியானா டியாசிடம் (பியூர்டோரிகோ) பணிந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com