ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் மாளவிகா பன்சோத் வெற்றி

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் மாளவிகா பன்சோத் வெற்றி
Published on

வான்டா:

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தின் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபே வீராங்கனையான சங் ஷோ யுன் உடன் மோதினார்.

இதில் பன்சோத் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மாளவிகா பன்சோத் இந்தப் போட்டியை 57 நிமிடங்களில் விளையாடி வெற்றியைக் கைப்பற்றினார்.

சீன தைபேயின் சங் ஷோ யுன் தரவரிசையில் உலகின் 23-வது நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com