சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி
Published on

பீஜிங்:

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், பிரான்சின் தோமா பாப்போவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் வீரர் 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் லக்ஷ்யா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com