தந்தையானார் குர்ணால் பாண்ட்யா- இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி

2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
தந்தையானார் குர்ணால் பாண்ட்யா- இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி
Published on

இந்தியா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரி ஷர்மாவுக்கு ஜூலை 24 அன்று ஆண் குழந்தை பிறந்தது. 2017-ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்கள் மகனுக்கு கவிர் என்று பெயரிட்டுள்ளனர்.

சச்சின், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பாண்டியா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்தப் பதிவு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com