பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழ்நாட்டை சேர்ந்த ஜெஸ்வின்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழ்நாட்டை சேர்ந்த ஜெஸ்வின்
Published on

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் மிகப்பெரிய கனவாக கருதப்படுகிறது. சமீபகாலமாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது.

சிறு வயது முதலே நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கும் ஜெஸ்வின் 2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப்போட்டிக்கு அவரால் முன்னேற முடியவில்லை. ஆனால், 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அந்த இறுதிப்போட்டியில் 12ம் இடமான கடைசி இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இருப்பினும் அவரது விடாமுயற்சி மற்றும் பயிற்சியால் தரவரிசை அடிப்படையில் தற்போது அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தமிழ்நாட்டிலிருந்து ஏற்கனவே 5 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இது முதல்முறையாகும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com