ரத யாத்திரை காலத்தில் ஜப்பான் ஓபன் வெற்றி கவித்துவமாக உணர்கிறது - பி.வி. சிந்து

மகாபிரபு ஜெகன்னாதரின் ஆசீர்வாதத்தை பெற பூரிக்கு திரும்பும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
பி.வி. சிந்து
Published on

பூரியில் பகவான் ஜெகன்னாதரின் ரத யாத்திரை நடைபெறும் அதே வேளையில், ஜப்பான் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்றது "உண்மையிலேயே கவித்துவமானது" என்று இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்தார்.

ஜப்பானின் அகனே யமகுச்சியை வீழ்த்தி பட்டம் வென்றதற்காக தனக்கு வாழ்த்து தெரிவித்த பிஜேடி (BJD) தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு சமூக வலைதள பதிவின் மூலம் பதிலளிக்கும்போது சிந்து இவ்வாறு குறிப்பிட்டார்.

வாழ்த்து செய்திக்கு பட்நாயக்கிற்கு நன்றி தெரிவித்த சிந்து, "அந்த வருடாந்திர விழாவை காணவும், மகாபிரபு ஜெகன்னாதரின் ஆசீர்வாதத்தை பெறவும் பூரிக்குத் திரும்பும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

எக்ஸ் பதிவு:

இது குறித்த எக்ஸ் தள பதிவில் பி.வி. சிந்து, "மிக்க நன்றி நவீன் சார். மூத்த அதிகாரியாக பணியாற்றிய எனது மாமனார், உங்களை பற்றியும், உங்கள் தலைமைத்துவம் மற்றும் ஒடிசாவில் உங்கள் நிர்வாகம் குறித்தும் எப்போதும் மிகவும் உயர்வாக பேசியிருக்கிறார்.

"காபிரபு ஜெகன்னாதரின் புனிதமான ரத யாத்திரை நடைபெறும் நேரத்தில் இந்த வெற்றி கிடைத்திருப்பது உண்மையிலேயே கவித்துவமாக உணர்கிறேன். விரைவில் பூரிக்கு திரும்பி, தெய்வீக கொண்டாட்டங்களை அனுபவிக்கவும், ஜெகன்னாதர் கோயிலில் மகாபிரபுவின் ஆசீர்வாதத்தை பெறவும் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

பட்நாயக் வாழ்த்து:

முன்னதாக, 'எக்ஸ்' தளத்தில் பட்நாயக் வெளியிட்ட பதிவில்: "ஜப்பான் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக, ஜப்பானின் அகனே யமகுச்சியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள்.

இறுதி போட்டியில் அவரது மிகச்சிறந்த ஆட்டம், உள்ளூர் வீராங்கனையும் மூன்று முறை உலக சாம்பியனுமானவரை நேர் செட்களில் வீழ்த்த உதவியது. அவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடரவும், நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com