புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூர் அணி நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர்
Published on

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் புள்ளிகளை எடுத்தன.

இறுதியில், ஜெய்ப்பூர் அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com