புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், உ.பி. அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூர் அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர், உ.பி. அணிகள் வெற்றி
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 34-27 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் அணி யு மும்பா அணியை 30-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com