புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் அணி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூர் அணி வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் அணி
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புனேரி பால்டன் அணியின் பிளே ஆப் வாய்ப்பு தகர்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com