ஐ.எஸ்.எல். கால்பந்து - அரையிறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி லீக் ஆட்டத்தில் ஐதராபாத், மோகன் பகான் அணிகள் மோதின.
ஐதராபாத்-மோகன் பகான் அணி வீரர்கள்
ஐதராபாத்-மோகன் பகான் அணி வீரர்கள்
Published on

 கோவா:

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்டங்களுக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

நேற்று நடைபெற்ற அரையிறுதி லீக் ஆட்டம் ஒன்றில் ஐதராபாத், மோகன் பகான் அணிகள் மோதின. 

இதில் ஐதராபாத் அணி சார்பில் பார்தோலோமிவ் ஓக்பெச்சே, முகமது யாசிர் மற்றும் ஜேவியர் சிவேரியோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

மோகன் பகான் அணி சார்பில், ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தனார். ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com