பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுகிறது.இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.

கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது.

இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது.

ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தால் ரூ.2 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலப்பதக்கம் பெற்றால் ரூ.75 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com