

பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.
இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது
இந்நிலையில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, சீனாவை எதிர்கொண்டது. இதில் அனந்த்ஜீத் சிங் நருகா - மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிகள் பெற்று நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டது.