ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கொடாய் நரோகா உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நரோகா 21-19, 21-11 என்ற நேர் செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங்-லியாங் ஜோடியிடம் 22-24, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, சீனா வீராங்கனை வாங் ஜியீயிடம் 21-13, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com