கொரியா ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி

தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
கொரியா ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி
Published on

சியோல்:

தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை லைன் கிறிஸ்டோபெர்சன் உடன் மோதினார். இதில் காஷ்யப் 15-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மால்விகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை லைன் ஜேயர்ஸ்பீல்டிடம் 21-18, 15-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சோசு வாங்கிடம் 8-21, 13-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெளியேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com