

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் கோ சே பே-நுர் இசுதீன் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.