இந்திய கிராண்ட் பிரீ தடகளம்: முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக வீராங்கனை

மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.
இந்திய கிராண்ட் பிரீ தடகளம்: முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக வீராங்கனை
Published on

சண்டிகார்:

இந்திய கிராண்ட் பிரீ 5 தடகள போட்டி சண்டிகாரில் நேற்று நடந்தது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடர் ஓட்டத்துக்கான தேர்வாக இது இருந்தது.

400 மீட்டர் ஓட்டம் ஏ மற்றும் பி என இரு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முதலிடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.40 வினாடியில் கடந்தார்.

ஹிமான்சி மாலிக், ஐஸ்வர்யா மிஸ்ரா போன்ற முன்னணி வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு அவர் முதல் இடத்தை பிடித்தார். 54.40 வினாடியில் கடந்தது அவரது சிறந்த நிலையாகும்.

மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.57 வினாடியில் கடந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பி. ராஜி 53.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com