இந்தியன் தடகள சீரிஸ்: 100மீ ஓட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்து தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்

100மீ ஓட்டப் பந்தயத்தில் தமிழ்நாட்டு வீரர்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்து அசத்தினர்.
இந்தியன் தடகள சீரிஸ்: 100மீ ஓட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்து தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்
Published on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்தியன் தடகள சீரிஸ் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 100மீ ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கிட்சன் 10.51 விநாகளிலும், சாம் வசந்த் எஸ் 10.60 விநாடிகளிலும், சந்தோஷ் பி 1070 விநாடிகளிலும் பந்தய தூரத்தை கடந்தனர்.

400மீ ஓட்டத்தில் கே. சந்தோஷ் 46.73 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடம் பிடித்தார்.

பெண்கள் பிரிவு

பெண்களுக்கான 100மீ ஆட்டத்தில் ஆர். கிரிதரணி 11.71 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். சுகா தர்ஷினி 11.70 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

100மீ ஹர்டுல்ஸ் பேட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நந்தினி (13.42 விநாடி), ஷைனி கிளாட்சியா (14.18) முறையே முதல் மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

உயரம் தாண்டுதல் போட்டியில் ஜிஜி ஜார்ஜ் (1.64மீ) 2-வது இடம் பிடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com