காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா

இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
boxers
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

4வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

இந்நிலையில், பத்தாவது நாள் முடிவில் இந்திய அணி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதில் குத்துச் சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவில் வெண்கலம் என மொத்தம் இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

தமிழக வீரர்கள்

இதேபோல், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கமும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

பதக்கப் பட்டியல்- டாப் 5 நாடுகளின் விவரம் வருமாறு:

ஆஸ்திரேலியா: 158 பதக்கம் (65 தங்கம், 41 வெள்ளி, 52 வெண்கலம்)

இங்கிலாந்து: 102 பதக்கம் (26 தங்கம், 41 வெள்ளி, 35 வெண்கலம்)

கனடா: 59 பதக்கம் (18 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம்)

இந்தியா: 39 பதக்கம் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்)

ஸ்காட்லாந்து: 38 பதக்கம் (13 தங்கம், 8 வெள்ளி, 17 வெண்கலம்)

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com