காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.
neeraj chopra
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

ஆறாவது நாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டின் 7-வது நாளான இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம் வருமாறு:

களம் காணும் நீரஜ் சோப்ரா

தடகளம்: ஈட்டி எறிதல் தகுதி சுற்று - நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் (மாலை 3 மணி).

டெகத்லான் நீளம் தாண்டுதல்- தேஜஸ்வின் சங்கர் (மாலை 3.20).

டிரிபிள் ஜம்ப் தகுதி சுற்று - செல்வ பிரபு திருமாறன், பிரவீன் சித்திரவேல் (மாலை 4.55).

டெகத்லான் குண்டு எறிதல் (மாலை 5.10). 400 மீட்டர் ஓட்டம் அரை இறுதி- விஷால் தென்னரசு (மாலை 5.40).

குண்டு எறிதல் இறுதிப்போட்டி: தஜிந்தர்பால் சிங், சமர்தீப் சிங் கில் (இரவு 11.30).

200 மீட்டர் ஓட்டம் அரையிறுதி - அனிமேஷ் குஜூர் (இரவு 11.37).

டெகத்லான் உயரம் தாண்டுதல் (இரவு 11.38).

பெண்கள் வட்டு எறிதல் இறுதிப்போட்டி - நிதி ராணி, சீமா (நள்ளிரவு 1.10).

பருல் சவுத்ரி

டெகத்லான் 400 மீட்டர் ஓட்டம் (நள்ளிரவு 1.30). பெண்கள் 5000 மீட்டர் ஓட்டம் - பருல் சவுத்ரி ( நள்ளிரவு 1.48).

பளு தூக்குதல்: பெண்கள் 86 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவு - மார்ட்டினா தேவி (மாலை 6.30), ஆண்கள் 110 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவு - லவ்பிரீத் சிங் (இரவு 11.00).

டிராக் சைக்கிளிங்: பாரா மகளிர் சி4-சி5 4000 மீட்டர் தனிநபர் பர்சூட் தகுதிச்சுற்று - லிஷா தாஸ் (மாலை 4.06). பதக்க போட்டி (இரவு 9.44 மணி முதல் 9.51 மணி வரை).

ஆண்கள் அணிகள் ஸ்பிரிண்ட் தகுதிச்சுற்று - டேவிட் எல்கடோசூங்கோ, ரோகித்சிங், ரொனால்டோ சிங் லைடன்ஜாம் (மாலை 5.07).

பதக்க போட்டி (இரவு 10. 50 மணி முதல் 10.55 வரை).

லான் பவுல்ஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா -(நவ்நீத் சிங், தினேஷ் குமார்) போட்ஸ்வானா மோதல் (இரவு 7.30). பெண்கள் ஒற்றையர் பிரிவு இந்தியா (நயன்மணி சைகியா) மலேசியா மோதல் (இரவு 8.55)

X

Maalai Malar
www.maalaimalar.com