

ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவால் இரண்டு பதக்கங்கள்தான் வெல்ல முடிந்தது.
சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தது. நார்வே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
பிரான்ஸ் ஒரு தங்கம், ஒரு வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்தது. இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது.