2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்த, அறிமுக வீரர் யாஷ் தாகூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
Team India
டீம் இந்தியா
Published on

இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 8 ரன்களில் வெளியேறினார்.

இஷான் கிஷன் அதிரடி

3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. அரைசதம் அடித்த இஷான் கிஷன் 44 பந்தில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 60 ரன்கள்

திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 60 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது.

ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

தொடக்க வீரர் பிரையன் பென்னெட் 19 பந்தில் 32 ரன்களில் விளாசினார். இதில் 3 சிக்சர், 3 பவுண்டரி அடங்கும். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பென் கர்ரன் 1 ரன்னிலும், டியோன் மையர்ஸ் 12 ரன்களிலும், சிகந்தர் ரசா ரன்ஏதும் எடுக்காமலுமு், ரியான் பர்ல் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுமு் யாஷ் தாகூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com