காமன்வெல்த் போட்டிகள்: சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் அசத்தல்.. குத்துச்சண்டையில் 7 தங்கம் குவித்த இந்தியா

பெண்கள் பிரிவில் குத்துச்சண்டையில் அருந்ததி சௌத்ரி, பிரீத்தி பவார், லம்போரியா, சாக்ஷி சௌத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர்.
அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச்
அங்குஷ் பங்கல், சச்சின் சிவாச்
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்து வருகின்றன.

சச்சின் சிவாச்

ஆடவர் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் சச்சின் சிவாச் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நமீபியாவின் டிரையாகின் மார்னிங் என்ட்வெலோவை, 3-2 என்ற புள்ளிக்கணக்கில் சச்சின் தோற்கடித்தார்.

சச்சின், தலைக்கு மேல் இருந்து ஒரு சக்திவாய்ந்த கிராஸ் பஞ்ச் குத்து விட்டதால், டிரையாகின் மார்னிங் என்ட்வெலோ தரையில் விழுந்தார்.

நடுவர் எண்ணி முடிக்கும் வரை அவர் எழுந்து கொள்ளாத நிலையில் சச்சின் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது குத்துச்சண்டையில் இந்தியா பெறும் ஆறாவது பதக்கமாகும்.

அங்குஷ் பங்கல்

குத்துச்சண்டையில் இந்தியாவின் ஏழாவது தங்கத்தை அங்குஷ் பங்கல் வென்றுள்ளார்

80 கிலோ பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த டிமேஜி ஷிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட இவர் முதல் சுற்றில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நரேந்தர் பெர்வால்

ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஏழு தங்கம்

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை அணி ஏழு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

முன்னதாக பெண்கள் பிரிவில் குத்துச்சண்டையில் அருந்ததி சௌத்ரி, பிரீத்தி பவார், லம்போரியா, சாக்ஷி சௌத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com