இந்தியா- ஆப்கானிஸ்தான் ODI: நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் ODI: நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை
Published on

இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி, முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி, நாளை முதல் 10-ம் தேதி வரை நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி ஜூன் 13ம் தேதி தர்மசாலாவிலும், 17-ம் தேதி லக்னோவிலும், 20-ம் தேதி சென்னையிலும் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய நேரப்படி, பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 20ம் தேதி நடைபெறும் இந்தியா- ஆப்கானிஸ்தான் ODI போட்டிக்கு ஜூன் 7ம் தேதி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஜூன் 7ம் தேதி காலை 11.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கப்படுகிறது.

District இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் 3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com