

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பானின் மினோரு கோகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 21-11, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, தென் கொரியாவின் ஜியான் ஹியோக் ஜின் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய மன்னேபள்ளி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோனக் சவுகான் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.