புரோ கபடி லீக்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அரியானா

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.இதில் பாட்னா பைரேட்ஸ் அணி தோற்று 2வது இடம் பிடித்தது.
புரோ கபடி லீக்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அரியானா
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

பிளே ஆப் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com