புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் உ.பி.யோதாசை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அரியானா

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உ.பி.யோதாஸ் அணி தோற்று வெளியேறியது.
புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் உ.பி.யோதாசை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அரியானா
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com