

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல் (தமிழ்நாடு), செல்வ பிரபு திருமாறன் (தமிழ்நாடு) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கல பதக்கமும் வென்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் எல்டோஸ் பால் மற்றும் அப்துல்லா அபூபக்கர் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். அதன்பின் தற்போது இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
ஜமைக்கா வீரர் ஜோர்டன் ஸ்காட் 16.72 மீ. தாண்டி தங்கம் வென்றார். பிரவீன் சித்ரவேல் 16.58மீ தாண்டினார். செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டினார்.
குத்துச் சண்டையில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் ஜடுமணி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான போட்டியில் பிரீத்தி பவார், ஜேஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தினர்.
பாரா தடகளத்தில் சோனம் ரானா தங்கம், சுபம் ஜெயல் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.