காமன்வெல்த் போட்டி: ஷிர்சே, ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

100மீ தடைகள் தாண்டி ஓட்டம் போட்டியில் இந்திய வீரர் ஷிர்சே 13.76 விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் ஷிர்சே
இந்திய வீரர் ஷிர்சே
Published on

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் ஆண்களுக்கான 100மீ தடைகள் தாண்டி ஓட்டம் (110M HURDLES) தகுதிச் சுற்று நடைபெற்றது.

அஷோக் ஷிர்சே

இதில் ஹீட் 1-ல் இந்திய வீரர் தேஜாஷ் அஷோக் ஷிர்சே கலந்து கொண்டார். இவர் பந்தைய தூரத்தை 13.76 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இந்த பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இவர் தகுதி பெற்றார்.

இங்கிலாந்து வீரர் சாமுவேல் பென்னெட் 13.20 விநாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். ஜமைக்கா வீரர் ஜெரோம் கேம்ப்பெல் 13.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார். இந்திய வீரர் ஷிர்சே மொத்தமாக 7-வது இடத்தை பிடித்தார்.

இறுதிச் சுற்று இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.15 மணிக்கு நடக்கிறது.

நீளம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீஷங்கர் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இவருடன் மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். இதில் ஸ்ரீஷங்கர் 8.01 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். அத்துடன் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

லோகேஷ் சத்யநாதன்

லோகேஷ் சத்யநாதன் குரூப் பி-யில் 7.77 மீட்டர் தூரம் தாண்டி 4-வது இடம் பிடித்தார். இவர் தகுதிக்கான தூரத்தை தாண்டவில்லை என்றாலும், பெஸ்ட் என்ற அடிப்படையில் இறுதி சுற்றுககு தகுதி பெற்றார். 29-ந்தேதி இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது.

பதக்கம் பட்டியல்

தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.

குர்விந்தர்வீர் சிங்

இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.

கானா வீரர் பெஞ்சமின் அசாமதி

என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.

கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com