கிளாஸ்கோ காமன்வெல்த்தில் ஏற்கனவே 12 தங்கம்: குத்துச் சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா

90 கிலோவுக்கு அதிகமானோர் பிரிவில் நரேந்தர் பெர்வால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Narender Berwal
நரேந்தர் பெர்வால்
Published on

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இன்று குத்துச் சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே 12 பதக்கங்கள் வென்றுள்ளது. குத்துச்சண்டையில் பிரிவில் மட்டும் 9 பதக்கம் ஆகும்.

குத்துச்சண்டையில் இன்று மட்டும் 5 பேர்

சாக்ஷி சவுத்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ், நரேந்தர் பெர்வால் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். குத்துச் சண்டையில் அரையிறுதியில் தோல்வயிடைந்தால் வெண்கல பதக்கம் கிடைக்கும். வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிக்கு போட்டியிட வேண்டும்.

இதுவரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. பளுதுக்குதல் போட்டியில் 1 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்றுள்ளது. அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதங்கங்கள் வென்றுள்ளது. பாரா பவர்லஃப்டிங் பிரிவில் வெண்கலம் வென்றுளளது.

மீராபாய் சானு தங்கம்

பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸில் ஷர்மிலா தங்கம் வென்றார்.

200மீ ஓட்டப்பந்தையத்தில் அனிமேஷ் குஜுர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் மற்றும் சமர்தீப் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா முதலிடம்

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா (80) முதலிடத்திலும், கனடா (13 தங்கம், மொத்தம் 35) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (10 தங்கம், மொத்தம் 44) 3-வது இடத்திலும் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com