பனாமாவை வீழ்த்தி கானா அணி அபார வெற்றி: உலகக் கோப்பையில் மாஸ் ஸ்டார்ட்!

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 90 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கப்பட்ட கோல் மூலம் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க நாடு கானா ஆகும்.
Ghana’s Stunning Victory Over Panama
Published on

2026-ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'L' பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடின. ஆட்டத்தின் பெரும்பகுதி நேரத்தைக் கானா அணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும், பனாமா அணியின் பலமான மற்றும் திட்டமிட்ட தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. அதே நேரத்தில், பனாமா அணியும் அவ்வப்போது எதிர்த்தாக்குதல்களை நடத்தி கானா அணியின் கோல்கீப்பர் லாரன்ஸ் அதி ஜிகிக்கு கடுமையான சவால்களை அளித்தது.

ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தில் கானா அணியின் இளம் வீரர் காலேப் யிரென்கி அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த கடைசி நிமிட கோல் பனாமா அணியின் புள்ளிக் கணக்கைத் தடுத்ததுடன், கானா அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

தற்போது குரூப் 'L' பிரிவிற்கான புள்ளிப்பட்டியலில், குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. பனாமா அணியை வீழ்த்திய கானா அணி இரண்டாவது இடத்திலும், பனாமா மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்தவிடம் தோல்வியடைந்த குரோஷியா அணி கடைசி இடத்திலும் உள்ளன. கானா அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் இந்த வெற்றி உத்வேகத்தைத் தொடர திட்டமிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com