

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அர்னால்டி, சக நாட்டு வீரரான பெரிட்டினியை வீழ்த்தி முதன்முறையாக அரைஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை அர்னால்டி 7-5 என்ற கணக்கில் போராடிக் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அர்னால்டி 5-2 என்ற கணக்கில் பலத்த முன்னிலையில் இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெரிட்டினிக்குக் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார். இதனால் அர்னால்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், 25 வயதான அர்னால்டி தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரைஇறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
அர்னால்டி அரை இறுதியில் 10 வது வரிசையில் உள்ள சக நாட்டவரான பிளாவியோ கோபாலியை நாளை எதிர் கொள்கிறார்.
மற்றொரு அரை இறுதியில் 2-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் - இளம் வீரரும், 26-வது வரிசையில் இருப்பவருமான மென்சிக் மோதுகிறார்கள்.
இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் 8 வது வரிசையில் உள்ள ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவா - 15 வது வரிசையில் உள்ள உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
இரண்டாவது அரையிறுதியில் 25-வது வரி சையில் இருக்கும் ரஷ்யாவின் டயானா சினைடர் - போலந்தின் மஜா சவாலின்ஸ்கா ஜோடி மோதுகின்றனர்.