வெற்றியை தீர்மானித்த ஒற்றை கோல்.. 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட் | Football World Cup 2026

போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
வெற்றியை தீர்மானித்த ஒற்றை கோல்.. 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய  ஐவரி கோஸ்ட் | Football World Cup 2026
Published on

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் உடைய அணி, தென் அமெரிக்காவின் ஈக்வடார் அணியை எதிர்கொண்டது.

அமெரிக்காவின் பிலடெல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி யாருக்கும் சாதகம் இல்லாமல் அமைந்தது. இதனால் இரண்டாவது பாதி அதிக எதிர்பார்ப்புடன் சென்றது.

போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது ஐவரி கோஸ்ட் சார்பில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் அமத் டயல்லோ மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 90வது நிமிடத்தில், அமத் டயல்லோ கோல் அடித்தார்.

அமத் டயல்லோ அடித்த ஒற்றை கோல் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரை ஐவரி கோஸ்ட் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் இ பிரிவில் ஐவரி கோஸ்ட் அணி மிகவும் வலுவான நிலைக்கு முன்னேறியுள்ளது. தென் அமெரிக்க அணிகளுக்கு எதிரான தான் சந்தித்த தொடர் தோல்விகளுக்கு ஐவரி கோஸ்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com