

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், டி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் அமெரிக்கா, பராகுவே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பராகுவே அணியின் போபாடில்ல ஓன் கோல் அடிக்க, அமெரிக்காவுக்கு முதல் கோல் கிடைத்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அமெரிக்காவின் பலோகன் 31 மற்றும், 45 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைபெறச் செய்தார். இதனால் முதல் பாதி முடிவில் அமெரிக்கா 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் பராகுவே வீரர்கள் கடுமையாகப் போராடினர். ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் மொரிசியா ஒரு கோல் அடித்தார்.
அதன்பின் பராகுவே அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.
கூடுதல் நேரத்தில் அமெரிக்காவின் ரேனா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.