2ஆவது ஆப்பிரிக்க நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி

7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.
2ஆவது ஆப்பிரிக்க நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி
Published on

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com