ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா

கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர். ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.
ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா
Published on

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com