ரியல் மாட்ரிட் தலைவர் தேர்தல்: ஜோவோ நெவ்ஸை குறிவைக்கும் ஃப்ளோரென்டினோ பெரஸ்!

"ஏற்கனவே மான்செஸ்டர் சிட்டி அணியின் ஜோஸ்கோ குவார்டியோலையும் பெரெஸ் குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின"
 Florentino Pérez Targets João Neves
Published on

ரியல் மேட்ரிட் கிளப்பின் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய தலைவர் ஃப்ளோரென்டினோ பெரெஸ் மீண்டும் வெற்றி பெற்றால், அணியின் நடுப்பகுதி பலத்தை அதிகரிக்கும் நோக்கில் போர்ச்சுகல் இளம் நட்சத்திரமான ஜோவோ நெவ்ஸை ஒப்பந்தம் செய்ய ஃப்ளோரென்டினோ பெரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பிரான்ஸ் கிளப்பான Paris Saint-German அணிக்காக விளையாடி வரும் 21 வயதான ஜோவோ நெவ்ஸ், உலகின் மிகச் சிறந்த இளம் மிட்ஃபீல்டர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரை அணியில் சேர்ப்பது பெரஸின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெவ்ஸின் தற்போதைய ஒப்பந்தம் PSG அணியுடன் 2029 வரை நீடிப்பதால், அவரை ஒப்பந்தம் செய்வது ரியல் மாட்ரிட்டுக்கு எளிதான காரியமாக இருக்காது. மேலும், அவரது சந்தை மதிப்பு சுமார் 140 மில்லியன் யூரோவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் PSG அணிக்காக அனைத்து போட்டிகளிலும் 38 ஆட்டங்களில் விளையாடிய ஜோவோ நெவ்ஸ், 7 கோல்களும் 4 அசிஸ்ட்களும் பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே, பெரஸ் மீண்டும் தலைவராகத் தேர்வானால், அணியில் பல பெரிய மாற்றங்களை மேற்கொண்டு புதிய "கலாக்டிகோஸ்" காலத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மான்செஸ்டர் சிட்டி அணியின் ஜோஸ்கோ குவார்டியோலையும் பெரெஸ் குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜோவோ நெவ்ஸும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். பெரெஸ் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ரியல் மேட்ரிட்டில் ஒரு புதிய 'மிரட்டல் கூட்டணி' யுகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com