யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து வெளியேறியது

குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து வெளியேறியது
Published on

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.

இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.

முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com