FIFA World Cup | காயத்தில் நெய்மர்: குரூப் போட்டியில் விளையாடுவாரா?

காயம் காரணமாக உலக கோப்பை தொடக்க போட்டியில் நெய்மர் விளையாடுவாரா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
FIFA World Cup | காயத்தில் நெய்மர்: குரூப் போட்டியில் விளையாடுவாரா?
நெய்மர்
Published on

உலக கோப்பை கால்பந்து தொடர் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இதில் 48 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. பிரேசில் அணி ஜூன் 13-ந்தேதி முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்த்து விளையாட இருக்கிறது.

எகிப்துக்கு எதிரான போட்டி

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாளை நட்பு ரீதியிலான போட்டியில் எகிப்து அணியை எதிர்த்து பிரேசில் விளையாட இருக்கிறது. இதில் முன்னணி வீரரான நெய்மர் விளையாடவில்லை. கடந்த 27-ந்தேதியின் போது பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு calf strain ஏற்பட்டுள்ளது. காயத்தின் வீரியம் கிரேடு-2 ஆக இருப்பதால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் விளையாடாமல் இருக்க வேண்டும்.

நெய்மருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

வரும் திங்கட்கிழமை நெய்மருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதியானால் ஜூன் மாதம் 13-ந்தேதி மொராக்கோ அணிக்கெதிராக பங்கேற்பார். இல்லையென்றால், ஜூன் 18-ந்தேதி ஹெய்தி அணிக்கெதிராக விளையாடலாம் என பிரேசில் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு, அவரது கால்பந்து வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com